கருமலை இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.  
தமிழ்நாடு

வால்பாறையில் கனமழை: நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்!

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்வு குறித்து.

DIN

வால்பாறையில் பெய்துவரும் கனமழையால் கருமலை இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கருமலை இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இன்று(ஜூன் 26) மாலை வ‌ரை பெய்த கனமழையால் வால்பாறை அருகே உள்ள சேடல் டேம் பகுதியில் குடியிருப்புப் பகுதி அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் ,வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 150 அடியாக உயர்ந்த நிலையில், இதே நிலை நீடித்தால் இன்னும் ஒருசில நாள்களில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 160 அடியை எட்டி நிறைந்துவிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு அறிவித்து ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Due to the heavy rains in Valparai, water is gushing from the Iraichalparai waterfall in Karumalai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT