கோப்புப் படம்
தமிழ்நாடு

ஜூலை 7-ல் அமித் ஷா சென்னை வருகை! ஆனால், இபிஎஸ் இல்லை?

அமித் ஷாவின் வருகை நாளிலேயே எடப்பாடி பழனிசாமியும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

DIN

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை நாளிலேயே எடப்பாடி பழனிசாமியும் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் அக்கட்சித் தலைமை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, இனி ஒவ்வொரு மாதமும் தமிழகம் வரவிருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜூலை 7 ஆம் தேதியில் சென்னைக்கு அமித் ஷா வருகை தரவுள்ளார். இந்த வருகையின்போது, மதுரையில் நடத்தப்பட்டதுபோல சென்னையிலும் பாஜக நிர்வாகிகளுடன் தனி அறையில் கருத்துகளை அமித் ஷா கேட்டறியலாம் என்று கூறப்படுகிறது.

சென்னைக்கு அமித் ஷா வருகைதரும் அதே நாளில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கோவையில் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முதல்வர் வேட்பாளராக அதிமுகவில் இருந்துதான் போட்டியிடுவர் என்று அமித் ஷா கூறிய நிலையில், தற்போது ஒரே நாளில் இருவரும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆனால், அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க விரும்பவில்லையா? என்று விமர்சித்து, சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், முதல்வர் வேட்பாளர் அதிமுக என்று மட்டுமே அமித் ஷா குறிப்பிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிடவில்லை என்பதாலும்தான், சலசலப்பு ஏற்பட்டிருக்குமோ என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

வார பலன்கள் - கன்னி

வார பலன்கள் - சிம்மம்

கீழவைப்பாறு விண்ணேற்ற மாதா கோயில் 468-வது ஆண்டுத் திருவிழா!

SCROLL FOR NEXT