X | K.Annamalai
தமிழ்நாடு

அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு! அமித் ஷா மீண்டும் வாக்குறுதி!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று அமித் ஷா மீண்டும் பேச்சு

DIN

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில், நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையின் திறன்களை தேசிய கட்டமைப்புக்கு பயன்படுத்திக் கொள்வதோடு, அவருக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போதும் அதனையே மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசியலில் அண்ணாமலை முக்கிய பங்கு வகிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 2026 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளர் அதிமுகவில் இருப்பார் என்றும் தெரிவித்தார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை நேரடியாக அமித் ஷா கூறாதது, அரசியல் விமர்சகர்களிடையே பேசுபொருளாகியது.

இருப்பினும், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்று அமித் ஷா கூறியதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்து முடிவு செய்வார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

இயற்கையும் மனித உளவியலும்...

கம்பனின் தமிழமுதம் - 61: நடக்க வேண்டியதே நடக்கும்!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பாரதி!

திருமணமும் மரணமும்...

SCROLL FOR NEXT