தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தவுள்ள ’வாட்டர் பெல்’ திட்டம் குறித்து...

DIN

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினைத் (Literacy Intervention centre) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.

மேலும், அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 16 அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்களையும் (STEM & SILC) திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது:

கேரளத்தில் அமலில் இருக்கும் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல் திட்டம்’ அரசுப் பள்ளிகளில் விரைவில் செயல்படுத்தப்படும்.

’வாட்டர் பெல்’ திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

Minister of School Education Anbil Mahesh has said that the 'Water Bell' project, which will ensure that students drink water at the appropriate time in government schools, will be implemented soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்! முதல்வர் வாழ்த்து!

தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது!

சொல்லப் போனால்... நாய் படும் பாடு!

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT