அமைச்சர் சிவசங்கர் கோப்புப் படம்
தமிழ்நாடு

பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு!

பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.

DIN

பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜூன் 30) தெரிவித்துள்ளார்.

சிறு வணிகர்களுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அவர்களுக்கு இது பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு பெரிய தொழில் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோதிலும் அதனை அரசே ஏற்கும். இதேபோன்று சிறு, குறு நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையும் அரசே ஏற்கும். புதிய மின் கட்டண உயர்வு நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதுள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும், இதன்மூலம்

அனைத்து வீட்டு இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார ஒழுங்குமுறை வாரியம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சதவீத கட்டண உயர்வை மின்சாரத் துறைக்கு பரிந்துரை செய்யும். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், மின்சார கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டில் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!

Minister Sivashankar announced that electricity tariffs for large industrial and commercial companies will be increased by no more than 3.16 percent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டங்கள் மட்டுமல்ல… இதயங்களும் பறந்தன! - 4th International Kite Festival in நம்ம சென்னை!

டிரம்ப் - புதின் சந்திப்பு: இந்தியாவின் நிலைப்பாடு என்ன? -வெளியுறவு அமைச்சகம் பதில்

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் சோதனை நிறைவு

வாக்குத் திருட்டு விவகாரம்: மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே வாக்குரிமைப் பேரணி! -தேஜஸ்வி

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிப்பு

SCROLL FOR NEXT