நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் ஜூலை 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தோ்த் திருவிழா இன்று(ஜூன் 30) கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. சிகர நிகழ்வாக ஜூலை 8 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி அன்றைய நாள்(ஜூலை 8) திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, அன்றைய நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறையையொட்டி ஜூலை 8 ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக ஜூலை 19 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
A local holiday has been declared for the Tirunelveli district on July 8th in view of the Nellaiappar Temple Therottam.
இதையும் படிக்க: ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.