அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோப்புப்படம்.
தமிழ்நாடு

ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வைப் போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகின்றன: ஆர்.பி.உதயகுமார்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வைப் போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

DIN

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வைப் போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடியோ பதிவு ஒன்றில் அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டம், மடப்புரம், கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு தமிழகம் மட்டுமல்ல, தேசிய அளவிலும் நீதி கேட்டு ட்ரெண்டிங் உருவாகி உள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆட்சியில் இருப்பது காவல் நிலையமா ? கொலை நிலையமா? என்று கேள்வி எழுந்துள்ளது. அரசு இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இதுகுறித்து ஸ்டாலின் பதில் சொல்ல முன்வரவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது? இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வு போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தகவல் வெளியிட்டது, அதில் லாக் அப் மரணத்தில் தென் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறியுள்ளது. ஏற்கெனவே 2022 ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் லாக்கப் மரணம் குறித்து எடப்பாடியார் பல்வேறு கேள்வி எழுப்பினர்.

ஆனால் உரிய பதிலை ஸ்டாலின் கூறவில்லை. எடப்பாடியார் கேட்ட கேள்விகளை கூட நேரடியாக ஒளிபரப்பு செய்யவில்லை. திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் எடுத்துக் கொண்டால் 2021 ஆண்டில் 2 மரணம், 2022 ஆண்டில் 4 மரணம், 2023 ஆண்டில் 7 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆக மொத்தம் இதுவரை 25 லாககப் மரணங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளி வருகிறது. அதேபோல கடந்த 2025 மார்ச் மாதம் முத்துக்குமார் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடியார் கேள்வி எழுப்பும் போது உரிய பதில் இல்லை.

இன்றைக்கு அரசு வேடிக்கை பார்க்கிறதா? ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் கையாள தெரியவில்லையா? இல்லை சாகட்டும் என்று சாக்கு போக்கு சொல்லி இருந்து விடுகிறாரா? ஸ்டாலினுக்கு காவல் துறையை வழிநடத்த தெரியவில்லையா?. ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழக காவல்துறை, இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்தது. வேடசந்தூரில் அரசு விழாவில் ஜெயலலிதாவின் படத்தை குப்பை தொட்டியில் போட்டுள்ளனர். இது மிகவும் வேதனை அளிக்கிறது.

இந்த ஆட்சியை குப்பை தொட்டியில் தூக்கிப் போட வெகு தொலைவு இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Summary

R.P. Udaya Kumar says Lockup deaths are increasing under Stalin's rule.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் சுதேசி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 05-10-2025

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

SCROLL FOR NEXT