முதல்வர் ஸ்டாலின்  
தமிழ்நாடு

தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி

கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

DIN

கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் இன்று (1-3-2025) மாலையில் நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த திருவாளர்கள் விஜயன் (வயது 52) த/பெ. தனிஸ்லாஸ், சோபன் (வயது 45) த/பெ. பெர்னின், மனு (வயது 42) த/பெ. ஒஸ்மான் மற்றும் ஜெஸ்டிஸ் த/பெ. விக்டர் (வயது 35) ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

கன்னியாகுமரி: தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இருவா் கைது

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

SCROLL FOR NEXT