சிதம்பரம் அருகே சி.வக்கிரமாரி கிராம குளத்திலிருந்து முதலையை மீட்ட வனத்துறையினர்  
தமிழ்நாடு

சிதம்பரம் அருகே கோயில் குளத்தில் புகுந்த முதலை மீட்பு!

சிதம்பரம் அருகே கிராம குளத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் இன்று மீட்டனர்.

DIN

சிதம்பரம் அருகே கிராம குளத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் இன்று (மார்ச் 2) மீட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்கிரமாரி கிராமத்தின் மாரியம்மன் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலை ஒன்று புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் வனச்சரக அலுவலர் கோ. வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர் கு. பன்னீர் செல்வம், சிதம்பரம் பீட் வனக்காப்பாளர் த. அன்புமணி ஆகியோர் அங்கு விரைந்து சென்று சுமார் 7 அடி நீளமுள்ள 50 கிலோ மதிக்கத்தக்க முதலையை பத்திரமாக பிடித்து அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னென்ன எண்ணங்கள்... மீதா ரகுநாத்!

முதல் டெஸ்ட்: டெவான் கான்வே அரைசதம்; நியூசி. 174 ரன்கள் குவிப்பு!

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

மோடி - டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

டாஸில் 15-0 தோல்வி... இந்திய கேப்டன் கூறியதென்ன?

SCROLL FOR NEXT