திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழாவில் கலந்து கொண்ட அய்யா வழி மக்கள்.  
தமிழ்நாடு

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா.

DIN

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவை முன்னிட்டு, இன்று(மார்ச். 4) அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.34 மணிக்கு கடலில் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வருதல் நடைபெற்றது. தொடர்ந்து பணிவிடை, அன்னதர்மம், இனிமம் வழங்குதல் நடந்தது.

அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாளை முன்னிட்டு இன்று காலை சூரிய உதயத்தில் கடலில் பதம் இடுவதற்கு வந்த அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர்.

விழாவில் தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிபதி வஷித்குமார், முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன், சட்ட ஆலோசகர் சந்திரசேகரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ் தர்மர், செயலாளர் பொன்னுத்துரை பொருளாளர் கோபால், துணைத் தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், இணைத் தலைவர்கள் விஜயகுமார், செல்வின், பால்சாமி, ராஜதுரை மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT