சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.
தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று(மார்ச் 4)முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து, தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த போக்குவரத்துக் கழக பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாநகர போக்குவரத்து சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.