நாமக்கல் துயரம்: வீட்டிலிருந்து தாய், மகன், மகள் சடலமாக மீட்பு
நாமக்கல்லில் வீட்டிலிருந்து தாய், மகன், மகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வீட்டிலிருந்து தாய், மகன், மகள் என மூன்று பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் வங்கி ஊழியர் பிரேம் ராஜின் மனைவி, மகன், மகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மூன்று பேரின் உடல்களும் உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பதி நகரில் வசித்து வந்த தனியார் வங்கி ஊழியர் பிரேம் ராஜ் தலைமறைவான நிலையில், அவரது மனைவி மோகனப்பிரியா (33), மகன் பிரினிராஜ் (13), பிரினித்தி (6) ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னதாக, கணவர் பிரேம்ராஜ், கடன் தொல்லை காரணமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தலைமறைவானதாகவும், அவர் ஆன்லைன் மூலம் ரூ.50 லட்சம் கடன் வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சடலமாகக் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் கொலை செய்யப்பட்டனரா அல்லது தற்கொலை செய்துகொண்டனரா என்பது உடல் கூறாய்வுக்குப் பிறகே தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவர் தலைமறைவானதால், மனைவி மோகனப்பிரியா பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].