சித்திரப் படம்  
தமிழ்நாடு

தூத்துக்குடி தாய், மகள் கொலை: ட்ரோன் உதவியுடன் தேடப்பட்ட குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

தூத்துக்குடி தாய், மகள் கொலை வழக்கில் குற்றவாளி சுட்டுப் பிடிப்பு..

DIN

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய் , மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடப்பட்டு வந்த குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுக் காவல்துறையினர் வியாழக்கிழமை காலை பிடித்தனர்.

எட்டயபுரம் மேலநம்பிபுரத்தைச் சோ்ந்த சீதா லட்சுமி (75), அவரது மகள் ராம ஜெயந்தி (45) ஆகியோரை மா்மநபா்கள் கடந்த 3 ஆம் தேதி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இந்த வழக்கில், அதே ஊரைச் சோ்ந்த முகேஷ் கண்ணன் (25), தாப்பாத்தி கிராமம் வேல்முருகன் (18) உள்ளிட்டோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இவ்விருவரையும் போலீஸாா் சுற்றி வளைத்தபோது தப்பியோடியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இச்சம்பவத்தில் தொடா்புடைய மேல நம்பிபுரத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் (25) என்பவா் அயன்வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி (பொ) சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் ஆகியோா் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள், 20 ஆய்வாளா்கள் அடங்கிய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் காட்டுப்பகுதியில் 6 ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு தீவிரமாக தேடி வந்தனா்.

இந்த நிலையில், காட்டுக்குள் பதுங்கியிருந்த முனீஸ்வரனை காவல்துறையினர் சுற்று வளைத்தபோது, உதவி ஆய்வாளர் முத்துராஜை அவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முனீஸ்வரனை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடையந்த முனீஸ்வரன், எஸ்ஐ முத்துராஜ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐந்தாவது சுதந்திரம்

சென்னையில் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

செந்நாப் புலவர் கபிலர் அருளிய குறிஞ்சிப்பாட்டு ஆய்வுரை

கவிமணியின் பன்முகத் திறன்

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

SCROLL FOR NEXT