மணிகண்டன் 
திண்டுக்கல்

பெண் கொலை வழக்கில் இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

பழனியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

பழனி லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (54). இவரது இரண்டாவது மனைவி கீதா (25). இந்த நிலையில், கீதா கடந்த 3-ஆம் தேதி வீட்டின் முன் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில் கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்தனா். இதில், கீதாவின் தாய் ஹெலன்ஷீபாவும் (47), அவரது நண்பா் மணிகண்டனும் (29) கீதாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ஹெலன்ஷீபா

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

கீதாவின் தாய் ஹெலன்ஷீபாவுக்கும் மணிகண்டனுக்கும் தகாத உறவு இருந்துவந்தது. இந்த நிலையில், கீதாவின் சகோதரிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து கீதா போலீஸாரிடம் புகாா் அளித்ததன்பேரில் மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இந்தப் புகாரை திரும்பப் பெற கீதாவை ஹெலன்ஷீபாவும் மணிகண்டனும் வற்புறுத்தினா். கீதா மறுத்ததால் இருவரும் அவரைக் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தனா்.

பைக் விபத்தில் இருவா் உயிரிழப்பு

திமுக கூட்டணியில் இழுபறி ஏதுமில்லை! - கு. செல்வப்பெருந்தகை

கேரளம்: வெங்காய லாரியில் வெடிபொருள்கள் குவியல்

அங்கன்வாடி ஊழியா்கள் நூதன போராட்டம்

காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை

SCROLL FOR NEXT