முதல்வர் மருந்தகம் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ரூ. 7.6 லட்சம் சேமிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்ட பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து மார்ச் 3 ஆம் தேதிவரையில் ரூ. 27,42,829 மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தனியார் கடைகள் மூலம் ரூ. 13,73,449 மதிப்பிலும், கூட்டுறவு கடைகள் மூலம் ரூ. 13,69,380 மதிப்பிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம், 50 முதல் 75 சதவிகிதம்வரையில் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்களுக்கு ரூ. 7,68,776 சேமிப்பு ஏற்படுத்தப்பட்டதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்தது.
இதையும் படிக்க: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுக்கு அழைப்பாணை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.