கோப்புப்படம். 
தமிழ்நாடு

தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை

தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக

Din

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பூமத்திய ரேகையையொட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) முதல் மாா்ச் 16-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆரஞ்ச் எச்சரிக்கை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை விருதுநகா், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதன்கிழமை (மாா்ச் 12) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் செவ்வாய், புதன் ஆகிய இருநாள்கள் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே.இ.தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்!

இது இந்தியா; வட கொரியா அல்ல! -பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்

சென்செக்ஸ் 27.46 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 0.06% உயர்வு!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்குத் தடை! ஏன்?

இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் அக்‌ஷர் படேல், சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT