தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  
தமிழ்நாடு

எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர்தான்: தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்

எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர்தான் என்று தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில் அளித்துள்ளார்.

DIN

எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர்தான் என்றும், மும்மொழிக் கொள்கை எனும் சங்கிலியை காலில் கட்டப்பார்க்கிறார்கள் என்றும் தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

தமிழக கல்வித் துறை அமைச்சர் தலைமையில், திமுக எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்து, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு, பிறகு யாரோ ஒரு சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எதிர்ப்பதாக, மக்களவையில் இன்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்திருக்கும் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்,

அனைத்திலும் முதல் பரிசை பெறுவதால் தமிழ்நாட்டை ஓட விட மாட்டேன் என்கிறார்கள். அதனால்தான், மும்மொழி கொள்கை எனும் சங்கிலியை காலில் கட்டிவிட்டு ஓடு ஓடு எனக் கூறுகின்றனர்.

பிம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக குழு அமைத்த பிறகே முடிவு என கடிதத்தில் தெளிவாக கூறினோம். நாட்டின் நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலின்தான் சூப்பர் முதல்வர் என அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், மத்திய அரசு நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் அன்பில் மகேஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மக்களவையில் இன்று தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாதது குறித்து காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் அதற்கு பதிலடியாக அன்பில் மகேஸ் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவின் நிறைவேறாத சில வாக்குறுதிகளுக்கு மத்திய அரசே காரணம்: வைகோ

மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

காம் & கூல்... கல்யாணி பிரியதர்ஷன்!

ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்குமார் சாதனை!

அட... ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT