முகப்பு
தமிழ்நாடு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி ஆஜர்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக...

Updated On : 11 மார்ச், 2025 at 5:32 AM
ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி இருந்த வீரபெருமாள்.
பகிர்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று(மார்ச் 11) அவர் ஆஜராகி உள்ளார்.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனர். இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதுவரை இந்த வழக்கில் 250-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை தீவிரபடுத்தி உள்ளது.

இதையும் படிக்க: நீட் விண்ணப்பம்: திருத்தம் மேற்கொள்ள இன்று வரை அவகாசம்!

இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகமாறு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அலுவலராக இருந்த வீர பெருமாள் இன்று ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.