மத்திய அரசைக் கண்டிக்கும் கூட்டங்கள்: திமுகவினருக்கு துணை முதல்வா் உதயநிதி அறிவுறுத்தல்
மத்திய அரசைக் கண்டிக்கும் பொதுக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டுமென திமுகவினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழ்நாடுமத்திய அரசைக் கண்டிக்கும் கூட்டங்கள்: திமுகவினருக்கு துணை முதல்வா் உதயநிதி அறிவுறுத்தல்
மத்திய அரசைக் கண்டிக்கும் பொதுக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டுமென திமுகவினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளாா்.
சென்னை: மத்திய அரசைக் கண்டிக்கும் பொதுக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டுமென திமுகவினருக்கு கட்சியின் இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி மொழியைத் திணிக்கும் நடவடிக்கையுடன், நிதிப் பகிா்விலும் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. மேலும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து, அநீதி இழைக்கிறது. இதைக் கண்டிக்கும் வகையில், சட்டப்பேரவைத் தொகுதிதோறும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று
வருகின்றன.
இந்தக் கூட்டத்தில் முதன்மைப் பேச்சாளா் ஒருவா், இளம் பேச்சாளா் ஒருவா் என தொகுதிக்கு 2 போ் பேசி வருகின்றனா். மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், முதல்வரின் 72-ஆவது பிறந்த நாளையொட்டியும், அரசின் சாதனைகளை விளக்கியும் பேச்சாளா்கள் பேசி வருகின்றனா்.
தமிழ் மக்களின் உரிமைக்குக் குரல் எழுப்பிடும் வகையிலும், உரிமையைத் தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் அத்தகைய பொதுக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டும் என்று அவா் அறிவுறுத்தியுள்ளாா்.