பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை  
தமிழ்நாடு

திமுகவினர் பயனடையும் பட்ஜெட்: அண்ணாமலை விமர்சனம்

தமிழக பட்ஜெட் குறித்து அண்ணாமலை விமர்சனம்..

DIN

திராவிட முன்னேற்றக் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை காலை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், மக்களுக்கு தொடர்ந்து ஏமாற்றத்தை பரிசளிக்கும் பட்ஜெட்டை திமுக தாக்கல் செய்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.

ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT