FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு!

நாளை(பிப். 17) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு.

Updated On : 16 பிப்ரவரி 2026, 12:10 pm IST
பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு - X / EV Velu
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் நாளை(பிப். 17) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.

2026-27 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஏற்கெனவே அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதையடுத்து திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதன்படி 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாளை காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்வார். தொடர்ந்து எத்தனை நாள்கள் அவை செயல்படும் என்பது இன்று நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

Advertisement

Advertisement

இந்நிலையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நாளை வரவுள்ளதால் சட்டப்பேரவை மேசை, மைக், இருக்கைகள் என செய்யப்பட்டுள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்தார். உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனும் உடனிருந்தார்.

summary

TN Interim budget: Minister E.V. Velu review in Assembly preparations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments