அப்பாவு  
தமிழ்நாடு

அதிமுக தீர்மானம்: பேரவையைவிட்டு வெளியேறினார் அப்பாவு!

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேரவையைவிட்டு வெளியேறியது பற்றி...

DIN

அதிமுக தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அவையைவிட்டு வெளியேறினார்.

சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பிச்சாண்டி தலைமையில் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகின்றன.

சட்டப்பேரவை கூட்டத் தொடா் தேதிகளை இறுதி செய்யபேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் அவரது அறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு மு.அப்பாவு பேசுகையில், என் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை அதிமுகவினா் அளித்துள்ளனா். அதில், தங்களை அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை எனவும், தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்யவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனா் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பேரவை செயலாளர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அதிமுக சார்பில் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் உள்பட அனைவரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடன் சட்டப்பேரவையில் இருந்து அப்பாவு வெளியேறினார்.

துணைத் தலைவர் பிச்சாண்டி அவை நடவடிக்கையை வழிநடத்தி வருகிறார்.

அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT