தமிழ்நாடு

வார இறுதி நாள்கள்: 616 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள்களை முன்னிட்டு 616 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Din

வார இறுதி நாள்களை முன்னிட்டு 616 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வார விடுமுறை நாள்களான சனிக்கிழமை (மாா்ச் 22), ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 23) சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) 270 பேருந்துகளும், சனிக்கிழமை 275 பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 51 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் 20 பேருந்துகளும் என மொத்தம் 616 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிறைவு!

சபரிமலை: பொன்னம்பலமேட்டில் திரளான பக்தர்கள் மகர ஜோதி தரிசனம்..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் துவங்கியது!

Vaa Vaathiyar - Movie Review! | எம்ஜிஆரா? நம்பியாரா? | Karthi | Nalan Kumarasamy | Dinamani Talkies

SCROLL FOR NEXT