புதுவை சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி 
தமிழ்நாடு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பேரவையில் 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வலியுறுத்தி, பேரவையில் 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

DIN

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, 16-வது முறையாக சட்டபேரவையில் அரசு கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார் அவைத் தலைவர் செல்வம்.

புதுச்சேரியில் கடந்த 10-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. 12-ஆம் தேதி பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்று இறுதி நாளான தனிநபர் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஏற்கனவே 15 முறை ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ள நிலையில் மீண்டும் இன்று காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

இதன் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர்(திமுக) சிவா, இப்போதைக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்றும், மாநில அந்தஸ்து பெற ஆட்சியை கலைத்து விட்டு வாருங்கள். போராடுவோம் என முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து தனி நபர் தீர்மானத்தை அரசு தீர்மானமாக முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்தார். இதையடுத்து அவைத் தலைவர் செல்வம், மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஏகமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநிலங்களவையிலும் வருமான வரி மசோதா-2025 நிறைவேற்றம்!

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் இரு மசோதாக்கள்!

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்..! உறவினர் பகிர்ந்த விஷயம்!

டோரா புஜ்ஜி... ஷாலின் ஜோயா!

விரைவில் ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்; பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT