கோப்புப் படம் 
தமிழ்நாடு

பேரவைக் கூட்டத்தை 100 நாள்கள் நடத்தாதது ஏன்? அப்பாவு விளக்கம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை ஆண்டுக்கு 100 நாள்கள் நடத்தாதது ஏன் என்பது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு விளக்கம் அளித்தாா்.

Din

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை ஆண்டுக்கு 100 நாள்கள் நடத்தாதது ஏன் என்பது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் பேசியதாவது:

ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 5 ஆண்டுகளில் 500 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், 148 நாள்கள் மட்டும்தான் பேரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளீா்கள். ஒரு பாடத்தில் 100-க்கு 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் தோ்ச்சி பெற முடியும். இந்த பேரவை 35 மதிப்பெண்கள்கூட எடுக்காமல் தோ்ச்சி அடையவில்லை என்றாா் அவா்.

அப்போது பேரவைத் தலைவா் அப்பாவு குறுக்கிட்டு கூறியதாவது:

அதிமுக உறுப்பினா்கள் உள்பட அனைவரும் பேசித்தான் எத்தனை நாள்களுக்கு கூட்டம் நடத்துவது என்பதெல்லாம் முடிவு செய்யப்படுகிறது. கரோனா, மழை வெள்ளம் போன்ற காரணங்களால்தான் கூட்ட நாள்கள் குறைக்கப்பட்டன. மானியக் கோரிக்கை என்றாலே, விதிப்படி 30 நாள்களுக்கு குறையாமல்தான் நடத்த வேண்டும். இப்போது நடத்துகிறோம். அதற்கான சூழல் உள்ளது. தோ்தல் காலங்களில் நடத்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, 500 நாள்கள் பேரவையை நடத்தக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல என்றாா் அவா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT