முகப்பு
உலகம்

ஈரானுடன் இன்னும் 10 நாள்கள் போர் தொடர்ந்தால்.. என்னவாகும்?

ஈரானுடன் இன்னும் 10 நாள்கள் போர் தொடர்ந்தால் நிலைமை என்னவாகும் என்பது பற்றி..

Updated On : 4 மார்ச், 2026 at 11:48 AM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - IANS
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 11:47 AM

அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில், மத்திய - கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில், ஈரான் இன்னும் 10 நாள்கள் போரைத் தொடர்ந்தால் நிலைமை என்னவாகும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கிறது.

அதாவது, ஈரான் தன்னுடைய தாக்குதலை இன்னும் 10 நாள்களுக்குத் தொடர்ந்தால், அமெரிக்காவிடம் கைவசம் இருக்கும் இடைநின்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகளின் கையிருப்பு தீர்ந்துபோய்விடும் அபாயம் இருப்பதாக அல் ஜஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

Updated On : 4 மார்ச், 2026 at 12:06 PM

அல் ஜஸீரா வெளியிட்டிருக்கும் செய்திகளின்படி, ஈரானுடனான தாக்குதல் தொடர்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பென்டகன் எச்சரித்திருப்பதாகவும், அதிக விலை மதிப்புள்ள ஏவுகணைகள் மற்றும் வாஷிங்டன்னில் வெடிபொருள்களின் கையிருப்பு மிக வேகமாகக் குறைந்து வருவதாகவும் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

இதற்கிடையேதான், ஈரானுடன் நடைபெற்று வரும் போரைத் தொடர, அமெரிக்காவுக்கு போதிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, அமெரிக்காவிடம் தேவையான வெடிபொருள்கள் கையிருப்பில் உள்ளன. தற்போது எங்களிடம் ஏராளமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதால், போரை வெற்றிகரமாக நடத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது, ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலில், வான் பரப்பு, கடல் பரப்பு மற்றும் நிலப்பரப்புகளிலிருந்து பாய்ந்து அழிக்கும் 20 வகையான ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.

அதில், பி-2 ஸ்டீல்ஸ் வெடிகுண்டுகள், லுகாஸ் டிரோன்கள், எஃப்-18 போர் ஜெட், எஃப்-16 போர் ஜெட், எஃப்-22 போர் ஜெட், ஏ-10 தாக்குதல் ஜெட்கள், போர்க் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்கள் என பல வகைகள் உள்ளன.

இதில், ஏற்கனவே, உக்ரைன் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு போர்க் காலத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை அமெரிக்கா வாரி வழங்கியிருந்தது.

Updated On : 4 மார்ச், 2026 at 12:22 PM

ஒருவேளை, ஈரானுடன் இன்னும் 10 நாள்களுக்குப் போர் தொடர்ந்தால், உடனடியாக சில ஆயுதங்கள், ஏவுகணைகளின் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் உயர்தர வெடிபொருள்கள் மற்றும் இடைநிறுத்தி தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் தாட் அமைப்புகளின் இருப்பு குறையலாம், தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு, ஒரு வார காலத்துக்கும் மேல் நீடித்த இஸ்ரேல் - ஈரான் போரின்போது, இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகளை வழங்கிய அமெரிக்கா, இரண்டு மேம்பட்ட தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை இஸ்ரேலுக்கு வழங்கியிருந்தது.

இது பற்றி பின்னாள்களில் அமெரிக்க அதிகாரிகள் பேசுகையில், 150 தாட் இடைநின்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் ஏவுகணைகளை எதிர்கொண்டதாகவும், இது நாட்டின் மொத்த ஏவுகணை கையிருப்பில் 25 சதவிகிதம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

Updated On : 4 மார்ச், 2026 at 12:35 PM

ஒரு தாட் பாட்டரி என்பது, 95 வீரர்கள், 6 டிரக்கில் ஏற்றப்பட்ட ஏவுதளங்கள், 48 இடைநிறுத்தி தாக்கும் ஏவுகணைகள், ஒரு ரேடார் அமைப்பு, ஒரு தீத்தடுப்பு மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களைக் கொண்டது.

ஒருவேளை, அமெரிக்க கையிருப்பு குறைந்து போனால் என்னவாகும்?

அல் ஜஸீரா செய்தியின்படி, ஈரானுடன் போர் தொடரும்பட்சத்தில், உடனடியாக அமெரிக்கா ஆயுத மற்றும் வெடிபொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் பாட்ரியாட் மற்றும் எஸ்எம்-6 ரக ஏவுகணைகளின் இருப்பும் உற்பத்தியும்தான் மிக முக்கியம். ஏற்கனவே, ரஷியாவை எதிர்கொள்ள இந்த வகையான ஏவுகணைகளைத்தான் உக்ரைன் பயன்படுத்தி வருகிறது.

மற்றவை இந்தோ -பசிபிக் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை ஈரான் பக்கம் திருப்புவது என்றால் அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.

எவ்வளவு செலவாகும்?

தற்போது ஈரானுக்கு எதிரான தாக்குதலில் போர் செலவு என்பது என்ன என்பதை பென்டகன் இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஆனால், தேவைப்படும் நிதி எவ்வளவு என்பது மட்டும் தீவிரமாக கணக்கிடப்பட்டு வருகிறது.

ஆனால், முதற்கட்ட தகவல்கள் என்னவோ, ஈரானுடனான முதல் 24 மணி நேரத் தாக்குதலுக்கு அமெரிக்கா 779 மில்லியன் டாலர்களை செலவிட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன. அதற்கடுத்து, தாக்குதல்கள் தொடரும் நிலையில் ஒவ்வொரு நாளும் 6.5 மில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On : 4 மார்ச், 2026 at 12:36 PM
summary

What will happen if the war with Iran continues for another 10 days?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.