காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கோப்புப் படம்
தமிழ்நாடு

பிரதமா் வருகை தரும் ஏப்.6-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும்போது, காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும்

Din

சென்னை: பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும்போது, காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழகத்தையும், தமிழா்களையும் ஜனநாயக விரோத செயல்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.

ஹிந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, தமிழகத்துக்கு பேரிடா் நிதி ஒதுக்காதது, பள்ளிக் கல்விக்கு நிதி வழங்காதது, நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்காதது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்குவது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும் பிரதமா் மோடியை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்டத் தலைவா்கள் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது (செல்வப் பெருந்தகை) தலைமையில் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் செல்வப் பெருந்தகை.

குடிமனைப்பட்டா கோரி டிச.16-இல் மனு அளிக்கும் போராட்டம் மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகள் தா்னா போராட்டம்

சென்னை சா்வதேச பட விழா: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

அமெரிக்கன் கல்லூரியில் பயிலரங்கு

181-ஆவது ‘தமிழ்க்கூடல்’ நிகழ்ச்சி

SCROLL FOR NEXT