மதுரையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் செல்லூர் ராஜூ.  
தமிழ்நாடு

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

DIN

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் நிதர்சனமான உண்மை. அமித்ஷா அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அமித்ஷாவை ஏன் தனித்தனியாக சந்தித்தீர்கள் என செங்கோட்டையனிடம் கேளுங்கள்.

அதிமுகவில் செங்கோட்டையன் மூத்த நிர்வாகி, மதிக்கக்கூடியவர். மதிக்ககப்பட்டவர். செங்கோட்டையன் அவரது கருத்தை சொல்லியுள்ளார். இபிஎஸ்ஸிடம் செங்கோட்டையன் சொல்லிவிட்டு சென்றாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. செங்கோட்டையன் கூட்டணி தொடர்பாக பேசினார் என்று செய்திகள் வந்ததா?. அதிமுக பிரியவில்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

ஒன்றிரண்டு பேர் போவது வழக்கமான ஒன்று. ஒரு தலைவர் சென்றால் அவர் பின்னால் 4 பேர் இருப்பார்கள். த.வெ.க விமர்சனத்தை நாங்கள் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. கருத்துக் கணிப்பு எல்லாம் தூள் தூளாக மாறிவிடும், மக்கள்தான் எஜமானர்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 1000 கருத்துக் கணிப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்.

எங்கள் கொள்கையில் நாங்கள் சரியாக தான் உள்ளோம். எடப்பாடி பழனிசாமி மிகவும் சரியாக உள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை - இயக்குநர்... வரலட்சுமி வெளியிட்ட புதிய விடியோ!

அசோக் லேலேண்ட் 3 வது காலாண்டு லாபம் 5.19% அதிகரிப்பு!

கலந்தாய்வு முடிந்தும் பணி ஆணை கிடைக்காமல் தவிக்கும் 1,429 சுகாதார ஆய்வாளர்கள்!

ஆப்கன் vs புரோட்டீஸ்! டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தலைசிறந்த ஆட்டம்!!

ஆதாரமற்ற குற்றச்சாட்டு! ராகுலுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் | செய்திகள்: சில வரிகளில் | 11.02.26

SCROLL FOR NEXT