தமிழ்நாடு

தமிழ்நாடு பெருமையுடன் கர்ஜித்தது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!

ஒரு மாபெரும் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

DIN

ஒரு மாபெரும் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிக்கும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கும் இடையே மாபெரும் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் பங்கேற்று போட்டியை கண்டுகளித்தனர்.

இந்நிலையில் சென்னையில் கால்பந்து போட்டி நடைபெற்றது பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"நேற்று இரவு தமிழ்நாடு பெருமையுடன் கர்ஜித்தது. பிரேசில் லெஜெண்ட்ஸ் VS இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இது ஒரு போட்டி என்பதைத் தாண்டி, எப்போதும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது. வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையிலான ஒன்று.

குழந்தைகளே, கடினமாகப் படியுங்கள், தைரியமாக விளையாடுங்கள், நியாயமாக வெற்றி பெறுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT