'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
உழைப்பாளர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து.
உழைப்பாளர் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று(மே 1) உழைப்பாளர் நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,
Advertisement
Advertisement
"ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி உறுதியை, ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக்காட்டி எடுத்த பணியை முடித்துக் காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்!
உழைப்பாளர் உரிமை காப்போம்!
இந்த மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஏடிஎம் கட்டண உயர்வு இன்று முதல் அமல்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.