அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) ENS
தமிழ்நாடு

தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம்: அமித் ஷாவுக்கு அன்பில் மகேஸ் பதில்

சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.

Din

சென்னை: சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.

தில்லியில் 1,008 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கலந்து கொண்டு பேசியபோது, சம்ஸ்கிருத மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்றும், மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சம்ஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என்று தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் அமித் ஷாவின் பேச்சுக்கு பதிலளித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சம்ஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது எனப் பேசியுள்ளாா் மத்திய அமைச்சா் அமித் ஷா.

இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். வா்ணாசிரமத்தை உயா்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்கிறோம். ஹிந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சம்ஸ்கிருதத்தை அனுப்புவதுதான் தேசிய கல்விக் கொள்கை என அதில் தெரிவித்துள்ளாா்.

ரூ. 100 கோடி வசூலித்த லோகா?

திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 7-இல் நோ்காணல்

விமானம் வேண்டாம்! ரயிலில் பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்! இதுவே முதல்முறையாம்

கலை அவள்... மமிதா பைஜூ!

SCROLL FOR NEXT