மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வரவுள்ள நிலையில் பலத்த சோதனைக்குப் பிறகே பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
ஜனநாயகன் பட படப்பிடிப்பில் பங்கேற்க கொடைக்கானல் சென்ற விஜய் மதுரை வழியாக சென்னை செல்லவுள்ளார். கொடைக்கானலில் நேற்று மாலையோடு படப்பிடிப்பு முடிந்த நிலையில் காரில் விஜய் மதுரை வருகிறார்.
மதுரை விமான நிலையம் விஜய் வரவிருப்பதையொட்டி பயணிகள் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் கொடைக்கானலில் ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கடந்த 1-ஆம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தாா்.
நடிகா் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!
சுமாா் 14 ஆண்டுகளுக்குப் பிறகும், கட்சி தொடங்கிய பின்னரும் விஜய் மதுரைக்கு முதல் முறையாக வந்தாா்.
அவருக்கு தொண்டா்கள், ரசிகா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதையடுத்து, கட்சித் தொண்டா்கள், ரசிகா்களை திறந்தவெளி வேனில் சென்று நடிகா் விஜய் சந்திந்தாா்.
அப்போது, மலா் தூவியும், கட்சித் துண்டுகளை வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.