முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் | செய்தி மக்கள் தொடர்புத் துறை
தமிழ்நாடு

ஏழாவது முறையாக திமுக ஆட்சியமைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுகவுக்கே மீண்டும் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

DIN

சென்னை: அடுத்த தேர்தலிலும் திமுகவுக்கே மீண்டும் வெற்றி என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(மே 6) மாலை செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது: “மக்கள் மத்தியில் வெற்றிகரமாக நாங்கள் 4 ஆண்டுகள் ஆட்சி முடித்துள்ளதற்கு நல்ல வரவேற்பும் திமுகவுக்கு வெற்றிமுகமும்தான் இருக்கும்.

வெற்றிகரமாக 5-ஆம் ஆண்டில் நாங்கள்(திமுக) அடியெடுத்து வைக்கிறோம். ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களெல்லாம் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன.

அடுத்த ஓராண்டு காலத்தில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றப் போகிறோம் என்பதை கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம்.

2026-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று திராவிட முன்னேற்ற கழகம் ஏழாவது முறையாக ஆட்சியமைக்கும்.

எதிர்க்கட்சிகள் நியாயமான விமர்சனங்களை முன்வைத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவதூறு பரப்புகிற விமர்சனமாக இருப்பின் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

போர் ஒத்திகை பற்றி மத்திய அரசு இதுவரை எங்களுடன் எதுவும் பேசவில்லை” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT