விபத்தில் சேமடைந்த அரசுப் பேருந்து.. 
தமிழ்நாடு

காரைக்குடியில் அரசுப் பேருந்து-பால் வாகனம் மோதல்: 3 பேர் பலி!

காரைக்குடியில் அரசுப் பேருந்து-பால் வாகனம் மோதியதி 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

DIN

காரைக்குடி அருகே அரசுப் பேருந்தும் பால் வாகனமும் இன்று அதிகாலையில் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வாகனமும் நேருக்கு நேர் மோதியது.

இதில் பால் வாகனத்தில் பயணித்த ஆறுமுகம், கருணா தமிழ்பாண்டியன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பால் வாகனத்தை ஓட்டி வந்த ரூபன், அரசு பேருந்து ஓட்டுநர் நாகராஜ், நடத்துநர் செல்வேந்திர பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் பயணித்த பயணிகளில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 4 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாலை சுமார் 3 மணி அளவில் நடந்த இச்சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து படுகொலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT