பொறியியல் சேர்க்கை 
தமிழ்நாடு

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு: முக்கிய விவரங்கள்

பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

DIN

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லாமல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கியிருக்கிறது. விண்ணப்பப்பதிவுக்கான இணையதளமான www.tneaonline.org தொடங்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முக்கிய நாள்கள்

விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் - மே 7, 2025

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் - ஜூன் 6, 2025

சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் - ஜூன், 9, 2025

ரேண்டம் எண் வெளியிடப்படும் நாள் - ஜூன் 11, 2025

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்கள் - ஜூன் 10 முதல் 20 வரை

தரவரிசைப் பட்டியல் வெளியீடு - ஜூன் 27, 2025

தரவரிசைப் பட்டியல் பிழை திருத்தம் - ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை.

கலந்தாய்வு தொடங்கும் நாள் - விரைவில் வெளியாகும்.

விண்ணப்பப் பதிவு கட்டணம்

ஓசி/பிசி/பிசிஎம்/எம்சிபி, டிஎன்சி பிரிவினர்க்கு ரூ.500/-ம், எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250/- ம் ஆகும். இது தவிர, கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான முன் வைப்புத் தொகையோ அல்லது கலந்தாய்வுக் கட்டணமோ எதுவும் இல்லை

இணையதள வசதி இல்லாத மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டைப் போலவே 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அழைப்பு எண்: 1800-425-0110.

மேலும், மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இந்த ஆண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 11 அரசு பொறியியற் கல்லூரிகளில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல்), கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு), கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (தரவு அறிவியல்), பி.டெக் (தகவல் தொழில்நுட்பவியல்), பொறியியல் (மெக்கட்ரானிக்ஸ்), பொறியியல் (ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேசன்), மின்னணுப்பொறியியல் மற்றும் கருவியியல், மற்றும் தொழில்துறை உயிர் தொழில்நுட்பவியல் போன்ற 12 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 720 மாணாக்கர்கள் பயன் பெறுவார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சாா்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.

நாளை பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், ஏராளமான மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்க வசதியாக இன்று இணையதளம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாக இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் - மே 7, 2025

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் - மே 23, 2025

கலை மற்றும் அறிவியல் கல்லூரி

மாணாக்கர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

ஒரு மாணவருக்கு : ரூ.48/- பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்

www.tngasa.in இணையதளம் வழியாக விண்ணப்பம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT