கோப்புப் படம் 
தமிழ்நாடு

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் பற்றி...

DIN

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் இன்று காலை முடிவுகளை வெளியிட்டார்.

தேர்வு எழுதியவர்களில் 7,53,142 மாணவ, மாணவிகள் (95.03 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதியதில் 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 26,877 பேர் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் தேர்ச்சியுடன் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

மாணவர்கள் https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி வசூல் எவ்வளவு?

கோவைக் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு! தற்காலிகமாக மூடல்!

தெருநாய்களிடம் சிக்கிய மான்! பரிதாபமாக உயிரிழப்பு! | CBE

அழகே உருவாய்... ஃபெளசி!

“கூலி - A சான்றிதழ்” குழந்தைகளுக்கு அனுமதி இல்லை! திரையரங்கில் பெற்றோர் வாக்குவாதம்!

SCROLL FOR NEXT