முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

விமான நிலையத்துக்கு இணையாக பேருந்து முனையம்: முதல்வர் ஸ்டாலின்

விமான நிலையத்துக்கு இணையாக பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு

DIN

திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டலின், விமான நிலையத்துக்கு இணையாக பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்வர் திறந்து வைத்து உரையாற்றினார். இந்த பேருந்து முனையம் ரூ.408.36 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பேருந்து முனையத்தை திறந்துவைத்த முதல்வர், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் அது பற்றியும் கேட்டறிந்தார்.

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தைத் திறந்துவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இது பஞ்சப்பூர் அல்ல, எல்லா ஊரையும் மிஞ்சப்போகிற மிஞ்சப்பூர் என்று தோன்றியது. மேலும், திருச்சி விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மின் தூக்கி, நகரும் படிகட்டு, ஏசி வசதி என விமான நிலையத்துக்கு இணையான வசதிகள் உள்ளன. தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சிக்கு இப்படியொரு பேருந்து முனையம் அவசியம்.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போல திருச்சியில் காமராஜர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இடைநிற்றல் கூடாது என மாணவர்களை தேடிப்போய் மீண்டும் பள்ளிக்கு அனுப்பினோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT