முதல்வர் ஸ்டாலின். கோப்புப்படம்.
தமிழ்நாடு

போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இந்திய முப்படை வீரர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு பேரணியாகத் திரண்டது. போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும்.

நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர்.

இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் கடந்த 3 நாள்களாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது.

ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்

ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி திறம்பட முறியடிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் போரை நிறுத்த இந்தியா- பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.

அதனை இந்திய தரப்பும் பாகிஸ்தான் தரப்பும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT