பாகிஸ்தான் கேப்டன், அபிஷேக் சர்மா, இந்திய கேப்டன்.  படங்கள்: ஐசிசி, பிசிசிஐ.
கிரிக்கெட்

தொடங்கியது வார்த்தைப் போர்: அபிஷேக் சர்மா குறித்த பாக். கேப்டனின் கருத்துக்கு இந்திய கேப்டன் பதில்!

இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா குறித்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவின் கருத்துக்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார்.

அபிஷேக் சர்மா இருந்தால் நன்றாக இருக்குமெனக் கூறிய பாகிஸ்தான் கேப்டன் விருப்பத்துக்கு, “அப்படியே செய்துவிடலாம்” என இந்திய கேப்டன் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

இந்த டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கின்றன.

இந்திய அணியின் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா கடைசி போட்டியில் வயிற்று வலி காரணமாக விளையாடவில்லை. தற்போது குணமாகி வருகிறார்.

அபிஷேக் சர்மா தற்போது வலைப் பயிற்சியில் விளையாடி வருகிறார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த சல்மான் அலி அகா, “நாங்கள் சிறந்த பேட்டர்களுடன் விளையாட விரும்புகிறோம். அதனால், அபிஷேக் சர்மா விளையாடினால் நன்றாக இருக்கும்” என்றார்.

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தக் கருத்துக்கு, “ஓக்கே, நீங்கள் விளையாட விரும்பினால், நாங்கள் அபிஷேக்கை விளையாட வைக்கிறோம்” என்றார்.

வலைப் பயிற்சியில் அபிஷேக் சர்மா 30 நிமிஷம் எந்தப் பிரச்னை இல்லாமல் விளையாடினார். உஸ்மான் தாரிக், அபிஷேக் சர்மா என இரு பக்கமும் பலமான நிலையில் இருக்கிறார்கள்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது வார்த்தைப் போர்ம் தொடங்கி இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: தலித் இளைஞர் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது; என்கவுன்டரில் 2 பேருக்கு காயம்

"கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதற்கு தகுதியான ஒரு கூட்டணி இன்னும் அமையவில்லை: தொல். திருமாவளவன்

ஜூன் வெளியீடாக ஜன நாயகன்?

தமிழகத்தில் பிப்.23இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

SCROLL FOR NEXT