அபிஷேக் சர்மாவின் பெயர் நீண்ட காலம் நினைவில் இருக்கும்: புஜாரா
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் பெயர் நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் பெயர் நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் தங்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி ஹைதராபாதில் இன்று (அக்டோபர் 14) நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 3 போட்டிகளில் 110 ரன்கள் எடுத்துள்ளார். இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் பெயர் நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்து அபிஷேக் சர்மா சாதனை படைப்பார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். மிகப் பெரிய சாதனையை அவர் குறைந்த போட்டிகளிலேயே படைத்துள்ளார். அவர் விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது, இந்திய அணியில் உள்ள சிறந்த டி20 வீரர்களில் அவரும் ஒருவர் என்றேக் கூறுவேன்.
டி20 வடிவிலான போட்டிகள் குறித்துப் பேசினால், நம் அனைவருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் நினைவுக்கு வருவார். அபிஷேக் சர்மாவுக்கும் அந்த மாதிரியான திறமை உள்ளது. இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் அபிஷேக் சர்மா மிகவும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அதிரடியாக விளையாட அதிகம் நேரம் எடுத்துக் கொள்வதில்லை. எதிரணியின் பலம் அறிந்து அதற்கேற்றவாறு பேட்டிங் செய்கிறார். அவர் ஹைதராபாத் திடலில் அதிகம் விளையாடியுள்ளார். அதனால், அங்கு அவருடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றார்.
இதுவரை இந்திய அணிக்காக 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா 2036 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 3 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 135*.
Former Indian player Cheteshwar Pujara has stated that the name of Indian opener Abhishek Sharma will be remembered for a long time.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.