அதிரடி சதத்தைத் தொடர்ந்து ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய அபிஷேக் சர்மா குறித்து...
ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மற்றுமொரு இந்திய வீரர் இஷான் கிஷன் மூன்றாமிடத்துக்கு கீழறங்கியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் தொடரையும் 3-0 என வென்றது.
இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 15 பந்துகளில் அரைசதமும், 35 பந்துகளில் சதமும் அடித்து சாதனை படைத்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
Advertisement
Advertisement
இந்த அபாரமான ஆட்டத்தினால் அபிஷேக் சர்மா ஐசிசி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் வீரர் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டாப் 10ல் மொத்தமாக நான்கு இந்தியர்கள் இருக்கிறார்கள். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 5 இடங்கள் கீழிறங்கியுள்ளார்.
ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசை
1. அபிஷேக் சர்மா
2. ஃபர்ஹான்
3. இஷான் கிஷன்
4. ஹாரி புரூக்
5. ஜாஸ் பட்லர்
Abhishek Sharma topples Ishan Kishan to become world No.1 batter in T20I rankings
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.