வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு.  
தமிழ்நாடு

இந்து முன்னணி மாவட்ட செயலருக்கு அரிவாள் வெட்டு; மனைவி கொலை: போலீஸ் விசாரணை

பரமத்திவேலூர் அருகே இந்து முன்னணி மாவட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிவிட்டு, அவரது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பரமத்திவேலூர் அருகே இந்து முன்னணி மாவட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிவிட்டு, அவரது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் கிழக்கு வண்ணாந்துறையைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(40). இவர் இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட செயலராக உள்ளார். இவரது மனைவி கீதா(37). இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11.50 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் ஜெகதீசனை அரிவாளால் வெட்டி விட்டு, மனைவி கீதாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிகிறது.

சென்னை- திருத்தணி இடையே குளிா்சாதன மின்சார ரயில்: பயணிகள் எதிா்பாா்ப்பு

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் பரமத்திவேலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ்கண்ணன் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நள்ளிரவே விரைந்து வந்தார். பலத்த காயமடைந்த ஜெகதீசன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொத்தனூரில் உள்ள ஜெகதீசன் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கொலையில் மர்ம நபர்கள் யாரேனும் உள்ளார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT