தமிழ்நாடு

விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் போட்டி: திருநங்கைகள் பங்கேற்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டி தொடர்பாக...

DIN

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோயில் திருவிழாவையொட்டி, விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி முதல், இரண்டாம் சுற்றுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, தமிழக அரசின் சமூக நலத் துறை ,தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஆகியவை இணைந்து இந்த அழகிப் போட்டியை நடத்துகின்றன.

அழகிப் போட்டிக்கான முதல் மற்றும் இரண்டாம் சுற்று விழுப்புரம் கே.கே. சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதல் சுற்றில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 26 திருநங்கைகள் பங்கேற்றனர். இவர்களிலிலிருந்து 15 பேர் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் தங்கள் எதிர்கால லட்சியம் குறித்து எடுத்துக் கூறினர். தொடர்ந்து மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்து, தங்களது அழகை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாலையில் இறுதிச் சுற்று நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மிஸ் கூவாகம் அழகித் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT