மத போதகர் ஜான் ஜெபராஜ் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

போக்ஸோ வழக்கு: மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்!

மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு வழக்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் குறித்து...

DIN

போக்ஸோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மத போதகா் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதபோதகரான ஜான் ஜெபராஜ், கோவையில் கிங் ஜெனரேஷன் பிராா்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மத போதகராக செயல்பட்டு வருகிறாா். கடந்த 2024 மே 21-ஆம் தேதி ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்தச் சிறுமிகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த ஜான் ஜெயராஜ் கடந்த ஏப்.12-ஆம் தேதி கேரள மாநிலம் மூணாறில் உள்ள விடுதியில் கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜான் ஜெபராஜ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி நிா்மல்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜான் ஜெபராஜ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், குடும்ப பிரச்னை காரணமாகவே இந்த புகாா் அளிக்கப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் அளித்த இந்தப் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னை மற்றும் புகாா் அளித்தவா் ஆகியோா் பின்னணி குறித்து நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி நிா்மல்குமாா், மனுதராா் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT