காதர் மொகிதீன், முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

ஐயூஎம்எல் தலைவராக 3வது முறையாக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து!

காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி.

DIN

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஐயூஎம்எல் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில், “இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு எனது வாழ்த்துகள்!

பண்பும் அரசியல் முதிர்ச்சியும் மதிக்கூர்மையும் பெற்ற பேராசிரியர் தலைமையில், இந்தியாவின் மதச்சார்பின்மையையும் மதநல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-இன் சீரிய மக்கள் பணி சிறக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா உடற்கல்வி உபகரணங்கள் வழங்க கோரிக்கை

SCROLL FOR NEXT