சென்னையில் மே 29, 30-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 29.5.2025, 30.5.2025 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களும்; மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே 29, 30 ஆகிய இரு நாள்களும் காலை, மாலை என இரு நேரங்களிலும் கலந்துகொள்ள வேண்டிய மாவட்டப் பொறுப்பாளர்களின் விவரங்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.