பொதுத் தோ்வு எழுதும் மாணவிகள். கோப்புப்படம்
தமிழ்நாடு

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்.

DIN

சிவகங்கை: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 278 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 105 மையங்களில் தேர்வு எழுதினர்.

8,070 மாணவர்கள், 8,809 மாணவிகள் என மொத்தம் 17,679 பேர் இத்தேர்வு எழுதினர். இதில் 8,662 மாணவர்கள், 8,718 மாணவிகள் என மொத்தம் 17,380 பேர் தேர்ச்சி பெற்றனர்.

98.31% தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது. அரசுப் பள்ளிகளிலும் 97.49% சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது.

அரசு பள்ளிகள் 79 பள்ளிகள் உள்பட மொத்தம் 17 5பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. கடந்த 2023ம் ஆண்டு 97.02 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது.

தொடர்ந்து 2024ம் ஆண்டும் 97.53 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும் பிடித்த நிலையில் இந்த ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்: விஜய்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

SCROLL FOR NEXT