தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை வெளியானது.
சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://tnresults.nic.in/ ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவா்களுக்கு கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தேர்ச்சி விகிதம்
வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2.25% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 4.14% அதிகரித்துள்ளது
மாணவிகள் தேர்ச்சி விகிதம் - 95.88%
மாணவர்களின் தேர்ச்சி - 91.77%
மூன்றாம் பாலினத்தவர்கள் - 100%
தனித்தேர்வர்கள் - 40.46%
சிறைவாசிகள் - 97.05%
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்
தமிழ் - 98.09%
ஆங்கிலம் - 99.46%
கணிதம் - 96.57%
அறிவியல் - 97.90%
சமூக அறிவியல் - 98.49%
முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள்
தமிழ் - 8
ஆங்கிலம் - 346
கணிதம் - 1,996
அறிவியல் - 10,838
சமூக அறிவியல் - 10,256
மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
சிவகங்கை - 98.31%
விருதுநகர் - 97.45%
தூத்துக்குடி - 96.76%
கன்னியாகுமரி - 96.66%
திருச்சி - 96.61%
அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்
அரசுப் பள்ளிகளில் இம்முறை அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை - 97.49%
விருதுநகர் - 95.57%
கன்னியாகுமரி - 95.47%
திருச்சி - 95.42%
தூத்துக்குடி - 95.40%
இதையும் படிக்க | 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! 92.09% தேர்ச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.