திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கரை ஒதுங்கி கிடப்பதாகக் கூறி, அப்பகுதியினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இறந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.