கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

மழை நிலவரம் பற்றி...

DIN

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை தமிழகத்தின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் 40 கிமீ வேகத்திற்கு காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல திருவள்ளூர், சென்னை, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

அபூர்வம்...

ஆரோவில் உருவானது எப்படி?

முதல்நாளில் ரூ.13 கோடி, 2-ஆம் நாளில் ரூ.50 கோடி! வசூலில் முன்னேறும் மதராஸி!

லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

SCROLL FOR NEXT